திருகோணமலை - மனையாவெளி பகுதியிலிருந்து கடற்தொழிலுக்கு சென்று படகு விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மனையாவெளி பகுதியிலிருந்து நேற்றைய தினம் கடற்றொழிலுக்காக சென்றிருந்த படகு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் இரண்டு பேர் பயணித்திருந்த நிலையில் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதோடு, மனையாவெளி பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான மீனவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.