கடத்தலுக்கு உட்பட்டதாக கூறப்படும் சுவிசர்லாந்து தூதரக பெண் அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 8 மணி நேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவர் நேற்று பிற்பகல் அந்த திணைக்களத்தில் முன்னிலையானதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக அவர் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதனிடையே, கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதரக பணியாளருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை காலம், இந்த மாதம் 12ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே அவருக்கு நேற்று வரையில் வெளிநாடுகளுக்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்தநிலையில், அந்த தடை இன்றிலிருந்து மீள நீடிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிசர்லாந்து தூதரக பெண் அலுவலகர், சம்பவம் இடம்பெற்று 14 நாட்களின் பின்னர் முதற் தடவையாக நேற்றுமுன்தினம் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினத்திற்கு முன்னதாக அங்கு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 அளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.