அரச துறையில் உள்ள பலவீனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்- ஜனாதிபதி

Tuesday, 10 December 2019 - 7:29

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
முன்னேற்றமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சுக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட புதிய செயலாளர்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அரச சேவையை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுப்பதில் நவீன தொழிநுட்பத்தை கூடியளவு பயன்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச கட்டமைப்பை ஊழல் மோசடிகள் அற்ற சரியான பொறிமுறையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விளக்கியுள்ளார்.