இன்றுடன் நிறைவடையவுள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

Tuesday, 10 December 2019 - 14:22

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.

கடந்த முதலாம் திகதி ஆரம்பமான மேற்படி தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 159 தங்கம் உட்பட மொத்தமாக 254 பதக்கங்களை பெற்றுக்கொண்டு இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

49 தங்கம் உட்பட மொத்தமாக 195 பதக்கங்களுடன் நேபாளம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 

39 தங்கம், 79 வெள்ளி மற்றும் 118 வெண்கல பதக்கங்களுடன் மொத்தமாக 236 பதங்கங்களுடன் மூன்றாவது இடத்தை இலங்கை பெற்றுள்ளது.

தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை பெற்றுக்கொண்ட அதிகளவான தங்கப்பதக்கங்கள் இம்முறையேயாகும்.

இதற்கு முன்னதாக இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 25 தங்கம், 63 வெள்ளி, 98 வெண்கலப்பதக்கங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.