தர்பார் படத்திற்கு தடை..! தடுமாறும் படக்குழுவினர்..!

Tuesday, 07 January 2020 - 15:38

%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88..%21+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..%21
ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய திரைப்படம் தர்பார். இத்திரைப்படம் வருகிற 9 ஆம் திகதி பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. வெகு காலம் கழித்து ரஜினிகாந்த் போலீஸாக நடிப்பதால் இத்திரைப்படத்திற்கு உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் ரூ.23 கோடி கடனை திரும்பி வழங்காமல் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என மலேசிய திரைப்பட வெளியீட்டு நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதை தொடர்ந்து மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.