தர்பார் திரை விமர்சனம்

Friday, 10 January 2020 - 9:56

%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
நடிகர்கள் : ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில்ஷெட்டி, யோகிபாபு, நிவேதா தாமஸ்
இசை :அனிரூத்
ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்
இயக்கம் : ஏ.ஆர். முருகதாஸ்
தயாரிப்பு : லைக்கா புரடக்ஷன்

தமிழ் சினிமாவில் வந்திருக்கும் மற்றுமொரு போலிஸ் படம். ஆனால் இது ரஜினி படம். அதுதான் படத்தின் வித்தியாசம், அதுவே படத்தை தூக்கியும் தாங்கியும் பிடித்துள்ளது.

டெல்லியில் யாருக்கும் அஞ்சாது பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து வரும் ரஜினிக்கு மும்பையில் உள்ள போதைப் பொருள் கும்பலை அழிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது. மும்பையில் ரவுடிகள் காவல்துறையினருக்கு பயமின்றி இருக்க, ரஜினி (ஆதித்யா அருணாசலம்) பொறுப்பேற்று இரண்டே நாளில் போதைப்பொருள் விற்பவர்கள், பெண்களை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து நகரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றார்.

அந்த நடவடிக்கையில் பெரிய தொழிலதிபர் மகனும் சிக்குகிறார், அவனை வெளியே விடாமல் ரஜினி பிடிவாதம் பிடிக்க, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தொழிலதிபர் மகனை சிறையில் இருந்து தப்பிக்க வைத்து வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றார். அதை தொடர்ந்து ரஜினி தன் தந்திரத்தால் அந்த தொழிலதிபர் மகனை கொல்கிறார், பிறகு தான் தெரிகிறது, இறந்தது வெறும் தொழிலதிபர் மகன் இல்லை, வேறு ஒரு டான் பையன் என்று, அந்த டான் யார்? அவனைக் கண்டுபடித்து அழித்தாரா? என்பது மீதிக்கதை.

ரஜினி ரஜினி என்ற மந்திர சொல்லில் படம் ழுவதும் அடங்கி விடுகிறது. அவருக்கு 70 வயது என்பதை நம்பவது ரொம்ப கடினம். அந்த அளவிற்கு துடிப்புடன் நடித்துள்ளார். வெறப்பான காவல் அதிகாரி, நயன்தாராவுடன் காதல் என ரவுண்ட் கட்டி ரங்கா, பில்லா படத்தை நினைவு படுத்துகிறார். அதுவும் இரண்டாம் பாதியில் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் காட்சி என ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார்.

படத்தில் முதல் பாதி செம்ம விறுவிறுப்பாக செல்கிறது, இரண்டாம் பாதி பல எதிர்ப்பார்ப்புடன் தொடங்க படத்தின் பிரதான வில்லன் யார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது, ரஜினிக்கு தெரியவில்லை அதனால் அவருக்கு சஸ்பென்ஸ் இருக்கும், ஆனால், நமக்கு பெரிய சஸ்பென்ஸ் ஒன்றும் இல்லை. ஒரு கட்டத்தில் அட சீக்கிரம் பைட்டுக்கு வாங்கப்பா என்ற மனநிலைக்கு சென்று விடுகிறது. ஆனால், சமீபத்திய ரஜினி படங்களில் இல்லாத செண்டிமெண்ட் காட்சிகள் இதில் கொஞ்சம் தூக்கல் தான், நிவேதா தாமஸும் அழகாக நடித்துள்ளார்.யோகிபாபு காமெடி கூட பல இடங்களில் க்ளிக் ஆகிறது, நயன்தாரா வழக்கம் போல் செட் ப்ராபர்டி போல் வந்து செல்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, மும்பை மற்றும் அதன் புறநகர்களுக்குள் நாமே போன அனுபவம், அனிருத் இசை படத்திற்கு பெரிய மைனஸ். டிரம் வாசிக்கிறவன் கூட பரவாயயில்லை. அவர்களை விட மோசமான இசை. காது கொய்ங்கிறது. ரஜினிக்கு என்று தீம் இசை இல்லை. சோகத்திற்கான மைல் இசை இல்லை என பல இல்லைகள் அவருடைய இசையில், முருகதாஸ் தன்னுடைய வழக்கமான பாணியில் செல்லாமல், ரஜனியை விறுவிறுப்பாக காட்டினால் போதும் என்று இருந்துவிட்டார். அதனால், முருகதாஸ் தோல்வியைத் தழுவி, ரஜினி வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல முடியும்.