ஒரே தரவு தளத்தில் இணைக்கும் நடவடிக்கை..

Sunday, 12 January 2020 - 12:57

+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
அரச நிறுவனங்களின் சகல தகவல்களையும் ஒரே தரவு தளத்தில் இணைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சகல தரவுகளையும் துரித கதியில் பெற முடியும் என்பதுடன் செலவீனத்தையும் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை சாரதி அனுமதிப்பத்திரம்இ குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள் பிறப்பு மற்றும் இறப்பு விபரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் ஒரே தரவு நிலையத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்பாட்டின் மூலம் பொதுமக்கள் தமக்கு தேவையான விடயங்களை மிக இலகுவாக குறுகிய காலப்பகுதியினில் பெற்றுக்கொள்ள முடியும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் ஜயந்த டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ஒரே நிலையத்தின் ஊடாக தரவு ஏற்றப்படும் போதுஇ பிழைகள் மற்றும் இரட்டை முறையிலான பதிவு ஏற்படாது என தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.