வாட்ஸ் அப்பில் வெளியான “தர்பார்”..! திண்டாடும் லைகா நிறுவனம்..!

Sunday, 12 January 2020 - 15:44

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E2%80%9C%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E2%80%9D..%21+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
“தர்பார்” படம் முழுவதுமாக வாட்ஸ் ஆப்பில் வெளியானதால் லைகா நிறுவனம் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “தர்பார்” திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி முதல் நாள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், பின்னர் எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால் அதன் பிறகு வசூல் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிருப்தியில் இருக்க அவர்களை மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக மற்றுமொரு பிரச்சனை உருவாகியுள்ளது.

வழக்கமாக தமிழ் படங்கள் வெளியாகும் போது, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களில் திருட்டுத் தனமாக வெளியாகும்.

ஆனால் இம்முறை “தர்பார்” முழு படமும் துண்டு துண்டு வீடியோக்களாக வாட்ஸ் ஆப்பிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து லைகா நிறுவனம் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனருக்கு முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.