நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ள விடயம்

Monday, 13 January 2020 - 7:20

%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
அரசாங்கம் வழங்கிய வெட் வரி நிவாரணத்தை இதுவரையில் பால்மாவுக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

வற் வரி நிவாரணத்தின் அடிப்படையில் 400 கிராம் பால்மா பொதியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும்.

இந்த நிவாரணம் ஜனவரி மாதம் முதல், புதிய தயாரிப்புக்களுக்கு வழங்கப்படும் என பால்மா வர்த்தகர்கள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் அந்த விலைக்குறைப்பினை பொதுமக்களுக்கு சில வர்த்தகர்கள் பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்கு நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு குறிப்பிட்டுள்ளது.