இந்திய-ஆஸி ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்..! முக்கிய வீரருக்கு காயம்..!

Monday, 13 January 2020 - 12:51

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D++%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..%21
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் ஆரம்பமாகின்றது.

இந்த தொடரின் முதல் போட்டி நாளைய தினம் வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற பயிற்சியின் போது அவரது வலது கையின் பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் நாளைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணி இந்தியாவில் விளையாடியுள்ள 91 ஒருநாள் போட்டிகளில் 52 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளதுடன் 34 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.