நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிரடி அறிவிப்பு

Monday, 13 January 2020 - 13:22

%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி திருத்தத்தின் நன்மைகளை இதுவரை நுகர்வோருக்கு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரச சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அவ்வாறான பல நிறுவனங்களின் பிரதானிகளை அதிகாரசபைக்கு அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வெட் வரி குறைக்கப்பட்டமை மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் வரியை இரத்து செய்தமையின் நன்மைகள் தமக்கு கிடைக்கவில்லை என குறித்த நிறுவனங்களின் அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறியப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.