வெடிப்பதற்கு தயாராகவுள்ள எரிமலை..!

Monday, 13 January 2020 - 13:20

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88..%21
பிலிப்பீன்ஸ் தலைநகர் மனிலாவிற்கு அருகில் உள்ள தால் என்ற எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனிலா நகரில் இருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அந்த எரிமலையில் தற்போது எரிமலை குழம்புகள் தென்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அந்த பகுதியில் வாழும் 8 ஆயிரம் பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த எரிமலை கடந்த 450 ஆண்டுகளில் குறைந்தது 34 தடவைகள் வெடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.