ஹெவ்ரின் கால்வ் இற்கு மரண தண்டனை...

Monday, 13 January 2020 - 20:37

%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88...
சிரியன் - குர்திஷ் அரசியல் தலைவர் ஹெவ்ரின் கால்வ் இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பி.பி.சி. இன் அராபிய பிரிவினால் மேற்கொண்ட ரகசிய விசாரணைகள் மூலம், துருக்கியின் ஒத்துழைப்புடன் செயல்படும் சிரிய தேசிய இராணுவம் என்ற அமைப்பே இதன் பின்னணியில் இருந்ததற்கான ஆதரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கும் இந்த கொலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அராபிய பிரிவினால் பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கொலையை மேற்கொண்டதாக குறிப்பிடப்படும் ஆயுத குழுவின் உறுப்பினர்கள், சம்பவத்தை நேரில் கண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப அங்கத்துவர்கள் மற்றும் முன்னாள் போராளிகளினால் அளிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த கொலை நன்கு நிரூபணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத குழுவிற்கு ஒத்துழைப்பினை வழங்கும் துருக்கி இந்த விடயத்தில்  கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.