சிம்பாப்வே செல்லவுள்ள இலங்கை அணி

Monday, 13 January 2020 - 20:48

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88++%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
இலங்கை தேசிய கிரிக்கட் அணி எதிர்வரும் 16 ஆம் திகதி சிம்பாப்வேவுக்கு செல்லவுள்ளது.

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி அங்கு செல்லவிருப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
 
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 19 ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 27 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.
 
இரண்டு போட்டிகளும் ஹராரே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.