பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும்...

Tuesday, 14 January 2020 - 7:23

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95++%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் பெயரிட்டுள்ளது.
 
தீவிரவாதம் தொடர்பான தமது பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று புதுப்பித்துள்ளது.
 
தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உட்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை அந்தப் பட்டியல் கொண்டுள்ளது.
 
இதற்கமைய, 15 தனி நபர்கள் மற்றும் 21 அமைப்புகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் பெயரிடப்பட்டுள்ளது.