பிரித்தானிய மகாராணி அனுமதி

Tuesday, 14 January 2020 - 8:53

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
இளவரசர் ஹரி மற்றும் அவரின் பாரியார் மேகன் மேர்க்கல் ஆகியோரின் மாற்றத்திற்கான காலத்திற்கு பிரித்தானிய மகாராணி அனுமதியளித்துள்ளார்.

இதற்கமைய, கனடா மற்றும் பிரித்தானியால் அவர்கள் நேரத்தை செலவிடுவதற்கு மகாராணி ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு புதிய பாத்திரத்திற்கான அவர்களின் விருப்பத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதாக மகாராணி கூறியுள்ளார்.

எனினும், முழுநேர பணிபுரியும் அரச குடும்பத்தினர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்றும் மகாராணி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், எதிர்வரும் நாட்களுக்குள் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள அவர் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்கல் ஆகியோர் விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.

இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மேர்களும், அரசு குடும்பத்துடன் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியாகியதாகவும், எனினும், அவை உண்மைக்கு புறம்பானவை என பிரித்தானிய அரசு குடும்பம் மறுத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், பிரித்தானிய அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்துதானும், தனது மனைவியும் விலகுவதாக இளவரசர் ஹரி அண்மையில் அறிவித்தார்.