ஜப்பான் இணக்கம்..

Tuesday, 14 January 2020 - 8:56

%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
பல்வேறு துறைகளில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிராந்திய மறுமலர்ச்சி பற்றிய ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் கொசோ யமமோடோவுக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
 
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை பலப்படுத்தி, அதனை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
 
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் முன்னேற்றமடைந்து வருகின்றது.
 
இதனால் ஜப்பானிய வர்த்தகர்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த பின்னணி உருவாகியுள்ளது எனவும் ஜப்பானிய இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.