கிரிந்திவளையில் பாதாள உலக குழு உறுப்பினர் கைதானார்....!

Tuesday, 14 January 2020 - 11:31

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D....%21
கிரிந்திவளை பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நே்றறைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வெளிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபருக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிரிந்திவெல, வரக்காபொல, கேகாலை, கனேமுல்ல, மற்றும் அலவ்வ ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஹங்வெல்ல பகுதியில் குறித்த நபர் சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டுள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.