ராஜித சேனாரட்ன பிரசன்னம்...

Tuesday, 14 January 2020 - 13:05

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...
18 நாட்களின் பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன குற்றப் புலனாய்வு பிரிவில் பிரசன்னமாகியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, 18 நாட்களின் பின்னர் நாரஹேண்பிட்டி லங்கா மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.

நள்ளிரவு 12.25 அளவில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாக அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் தமக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதியாகினார்.

இந்த நிலையில், 18 நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில், இன்று அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, மருத்துவமனையில் அனுமதியாகிருநதமை மற்றும் அவருக்கு மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இது குறித்து சுகாதார அமைச்சு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.