அரச பிரதிநிதிகள் மூவர் இலங்கை விஜயம்..

Tuesday, 14 January 2020 - 13:07

+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..
மூன்று உலக வல்லரசுகளின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான அரச பிரதிநிதிகள் மூவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ் மற்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து, உடனடியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்திருந்தார்.

இதனை அடுத்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரும் இலங்கை வந்து சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது, ஜப்பானின் பிராந்திய மறுமலர்ச்சிக்கான ராஜாங்க அமைச்சரும் இலங்கை வந்துள்ளார்.
 
இந்தநிலையில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவு விடயங்களுக்குப் பொறுப்பான அரசாங்க பிரதிநிதிகள் இலங்கை வந்திருக்கின்றமை முக்கியத்துவம் பெறுவதாக ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் சம்மந்தமான உதவி ராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ், இன்று மதியம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளது.
 
இதேவேளை, இலங்கை வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் தெற்காசிய பிராந்தியங்களுக்கான பணிப்பாளர் கரேத்பெய்லி நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.
 
இதன்போது ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 30ஃ1 பிரேரணை சம்மந்தமாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இந்த பிரேரணை அமுலாக்கம் தொடர்பான அவதானிப்பு அறிக்கை ஒன்றை மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் முன்வைக்கவுள்ளார்.
 
அதன்பின்னர் குறித்த பிரேரணையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்மந்தமாக நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அங்கு கருத்து தெரிவித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 30ஃ1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் வெளியேற முடியாது எனவும் அவ்வாறு வெளியேறினால் அடுத்த கட்டமாக சர்வதேச தரப்பினரை சந்தித்து அழுத்தங்களை பிரயோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
உள்நாட்டு செய்தி