புதிய சாதனையை நோக்கி விராட் கோலி

Tuesday, 14 January 2020 - 13:40

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF
இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மற்றுமொரு சாதனையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக அதிக சதங்களைப் பெற்ற அணித்தலைவர் என்ற மைல் கல்லை எட்டுவதற்கு விராட் கோலிக்கு இன்னும் ஒரு சதம் மாத்திரமே தேவைப்படுகிறது.

தற்போது அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொன்டிங் 41 சதங்களை பெற்றுள்ளமையே இதுவரையில் உலக சாதனையாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த பங்களாதேஷ் தொடரின் போது ரிக்கி பொன்டிங்கின் சாதனையை விராட் கோலி சமப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இன்று இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், அவ்வணியின் முன்னாள் தலைவரின் சாதனையை விராட் கோலி அவ்வணிக்கு எதிராக முறியடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.