இலங்கைக்கு தேவையான ஆயுதங்களை ரஷ்யா வழங்கும்- ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்

Tuesday, 14 January 2020 - 14:42

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
இலங்கை இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி டவ்ரோ தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரான தினேஸ் குணவர்தனவை சந்தித்தார்.

இருவரும் இன்று கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்குபற்றியிருந்தமை விசேட அம்சமாகும். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களின் போது ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இன்று பிற்பகல் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.