சற்றுமுன் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!

Tuesday, 14 January 2020 - 15:31

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..%21
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரொருவருக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபரை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்ரம் களுஆராச்சி முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொடதெனிய பகுதியில் வசித்து வரும் குறித்த நபர் கடந்த 2010ஆம் வருடம் நவம்பர் மாதம் 10ஆம் திகதி 2.87 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குறித்த சந்தேக நபருக்கு இருவேறு குற்றங்களின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.