தண்டனைக்குரிய குற்றமாகும்..

Tuesday, 14 January 2020 - 20:18

%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
இனங்களுக்கு இடையில் மோதல் உருவாகும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ள கருத்து தண்டனைக்குரிய குற்றமாகும் என பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளளர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பல்வேறு வழக்குகள் தொடர்பில் நீதிபதிகளுக்கு அழுத்தம் வழங்கியுள்ளமை குரல்பதிவுகள் ஊடாக தெளிவாகியுள்ளது.

காவல்துறையினருக்கும் அழுத்தம் விடும் குரல் பதிவும் நீதிமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் குரல் பதிவும் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.

அரசியலமைப்பின் 111 ஆம் அத்தியாயத்தின் ஊ பிரிவிற்கு அமைய, நீதிமன்றத்தை அவமரியாதைக்கு உட்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒருவருக்கு எதிராக குறித்த குற்றம் நிரூபணமாகுமாயின், ஒரு வருட சிறைத் தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும்.
 
அதுமாத்திரமின்றி, 7 வருடங்களுக்கு குடியுரிமையை தடை செய்ய முடியும் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், புத்தரை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
அந்த குற்றத்தின்கீழ் கைதுசெய்யப்படும் ஒருவருக்கு, நீதவானினால் பிணை வழங்க முடியாது.
 
மேல்நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்படும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும்.
 
இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி அழைப்ப்புகளை குரல் பதிவு செய்வாறாயின், அதனை பாதுகாக்க வேண்டியது அவருடைய பொறுப்பாகும்.

எனினும், அதனை அவரால் செய்ய முடியாவிட்டால், அவருக்கு  எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.