இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தற்போது விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி திணைக்கள் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் நாட்டிற்கு 19 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.
கடந்த டிசெம்பர் மாதத்தில் மாத்திரம் இரண்டு இலட்சத்து 41 ஆயிரத்து 653 பேர் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.
இந்தநிலையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் ஊடாக 10 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த ஆண்டு இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.