ரோகித் முன்னிலை..

Thursday, 16 January 2020 - 15:00

%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88..
2019 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரர்களுக்கான விருதுகள் பட்டியலை சர்வதேச கிரிக்கட் பேரவை வெளியிட்டுள்ளது.
 
இதற்கமைய ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரராக இங்கிலாந்து அணியின் சகல துறை வீரர் பென் ஸ்டொக்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
அத்துடன் சிறந்த ஒருநாள் கிரிக்கட் வீரராக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தெரிவாகியுள்ளார்.
 
அதேநேரம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக அவுஸ்திரேலிய அணியின் வீரர் பட் கம்மின்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்திய அணியின் வீரர் தீபக் சஹார் ஆண்டின் சிறந்த இருபதுக்கு 20 வீரராக சர்வதேச கிரிக்கட் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.