காவல் துறையினரின் மோப்ப நாய் செய்த அதிசயம்....! வியந்து போன பொலிசார்....! காணொளி

Friday, 17 January 2020 - 12:57

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D....%21+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D....%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
காவல் துறைக்கு சொந்தமான மோப்ப நாய் ஒன்று பலரையும் வியக்க வைக்கும் வகையில் தனது அசாத்திய திறமையை வௌிக்கொணர்ந்துள்ளது.

வௌ்ளவாய - எதிமலை கெமுனுபுர பகுதியில் நபர் ஒருவர் தனது புதல்வனை தினமும் பாடசாலைக்கு அழைத்து செல்வது வழக்கமாகும்

அவ்வாறு நேற்றைய தினமும் தனது மகனை பாடசாலைக்கு அழைத்து சென்று வீடு திரும்புவதற்கு சற்று தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் குறித்த நபரின் வீட்டினை தினமும் நோக்குவதுடன் அப்பகுதியில் நடமாடியுள்ளார்.

வீட்டில் யாருமற்ற நிலையில் வீட்டிற்குள் புகுந்த நபர் வீட்டிலிருந்த ஒருலட்சத்து 50 ஆயிரம்  ரூபாவினை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

தனது மகனுடன் வீடு திரும்பிய நபர் வீடு திறந்திருப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதுடன் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமையையும் அறிந்துக்கொண்டுள்ளார்.

பின்னர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்ததுள்ளதுடன் பணத்தினை கொள்ளையிட்டவரை கண்டறியமுடியவில்லை.

இந்நிலையில் காவல் துறைக்குரிய மோப்ப நாய் ஒன்றினை கொண்டு கொள்ளையரை கண்டறிய முயற்சித்துள்ளனர்.

மோப்ப நாய் செயல்பட ஆரம்பித்து சில நிமிடங்களில் வீட்டிற்கு முன்பகுதியில் காணப்படும் பிரதான வீதி வழியே ஓடியுள்ளது.

சுமார் 11.5 கிலோமீற்றர்கள் கடந்த மோப்ப நாய் வீடு ஒன்றிற்குள் சென்று  கதிரை ஒன்றிற்கு அருகே இளைப்பாறியுள்ளது.

விசாரணைகளை ஆரம்பித்த காவல் துறையினர் குறித்த வீட்டிலுள்ள நபரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த நபரே பணத்தினை கொள்ளையிட்டுள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மோப்ப நாயானது பணத்தினை கொள்ளையிட்ட நபர் அமரும் கதிரைக்கு அருகிலேயே சென்று இளைப்பாறியுள்ளமை காவல் துறையினருக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.