துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் கொலன்னாவைக்கு தேவை..

Friday, 17 January 2020 - 19:27

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88..
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் கொலன்னாவைக்கு தேவை என கூறி அந்த பிரதேச முஸ்லீம் மக்கள் இன்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் கொலன்னாவ நகரில் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லீம் முன்னணியின் கொலன்னாவ பிரதிநிதிகள் மற்றும் கொலன்னாவ முஸ்லீம் ஒன்றியத்தின் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்கு பின்னர் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் தொலை பேசி உரையாடல் மூலம் வெளிவந்த நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு நீதியை பெற்று கொடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.