பல்வேறு காரணங்களுக்காக இராணுவத்திலிருந்து இடைவிலகிச் சென்றவர்களுக்கு மீண்டும் இராணுவத்தில் இணைந்துக்கொள்வதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, எதிர்வரும் பெப்பரவரி 5ஆம் திகதி தொடக்கம் 7 நாட்கள் வரையில் மேற்படி பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பொது மன்னிப்பு காலமானது கடந்த 2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து இடைவிலகியவர்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் சட்டப்பூர்வமாக இராணுவத்தை விட்டு விலகிச் செல்லவோ அல்லது மீண்டும் முப்படைகளில் இணைந்து நாட்டுக்கு சேவையை வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.