இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
ராஜ்கோட்டில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில், சிக்கர் தவான் அதிகூடுதலாக 96 ஓட்டங்களை பெற்றதுடன், கே.எல்.ராஹ_ல் 80 ஓட்டங்களையும், அணித் தலைவர் விராட் கோலி 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதையடுத்து, 341 என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 49.1 ஓவர்களில் 304 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில், ஸ்ரீவன் ஸ்மித் 98 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில், மொஹமட் சமி அதிகபட்சமாக 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இந்திய அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1 க்கு 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.
தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி, நாளைய தினம் பெங்களுரில் இடம்பெறவுள்ளது.