நாட்டின் சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதற்காக 10.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த நிதி இந்த ஆண்டு வழங்கப்படும் என்று, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக்கான கொரிய நாட்டு தூதுவர் லியோன்லி தெரிவித்துள்ளார்.
குச்சவெளி சுற்றுலா வலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 5.36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதன் கீழ் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், மாத்தளை எடன் வல சமூக சேவை சுற்றுலா கிராம அபிவிருத்தி திட்டத்திற்காக 5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.