இந்தியாவும், ஈரானும் இணைந்து செயற்பட வேண்டும்

Saturday, 18 January 2020 - 7:22

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இந்தியாவும், ஈரானும் இணைந்து செயற்பட வேண்டும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஷரிப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் மும்பையில் நேற்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் சபாஹர் ஊhயடியாயச துறைக நிர்மாணம் மற்றும் ஈரானின் துறைமுக நகரத்தை ஷஹெடானுடன் ணுயாநனயn இணைக்கும் தொடருந்து வலையமைப்பு திட்டம் என்பன குறித்து இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சபாஹர் துறைமுக அபிவிருத்திகாக ஈரானும், இந்தியாவும் கடந்த 2018 ஆம் ஆண்டு 85 மில்லியன் டொலர் மதிப்பிலான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

இந்த நிலையில், அமெரிக்காவின் விலக்குகளை மீறி துறைமுக திட்டத்திற்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் இந்தியா சிக்கல்களை எதிர்கொள்வதே அதன் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதென ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயத்தில் இந்தியாவும், ஈரானும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.