உலகின் மிக குள்ளமான மனிதர் மரணம்

Saturday, 18 January 2020 - 10:44

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
உலகின் குள்ளமான மனிதர் என்று நம்பப்படுபவரும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருந்த நபர் நேற்றைய தினம் (17) நேபாளத்தில் வைத்து காலமானார்.

ககேந்தர தாபா மாகார் என்ற பெயர் கொண்ட அவர் 2 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழக்கும் போது அவருக்கு வயது 27 ஆகும்.

கடந்த 2010ம் வருடம் மாகார் உலகின் மிகவும் குள்ளமான மனிதனாக கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பிடித்தார்.

பின்னர், 1.8 அடி உயரத்தில் இருந்த மற்றுமொரு நேபாள நாட்டவரான சந்திர பஹதுர் டங்கி என்பவர் மாகாரின் சாதனையை முறியடித்திருந்த நிலையில் அவர் கடந்த 2015ம் வருடம் உயிரிழந்தார்.

இதனையடுத்து மாகார் மீண்டும் உலகின் குள்ளமான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.