தங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலி

Saturday, 18 January 2020 - 11:20

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
நாரம்மல-குளியாபடிய வீதியின் தங்கொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது மகளும் அவரது தாயாரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தானது, முச்சக்கர வண்டி மற்றும் சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுடன் நாரம்மல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கு காரணமான சிற்றூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த தாயும் மகளும் ஹொரொம்பாவ-கொரொக்கலவத்த பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.