சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் அமெரிக்கா அவதானம்

Saturday, 18 January 2020 - 13:28

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
சீனாவின் உவான் பிராந்தியத்திலிருந்து பரவும் புதிய வைரஸ் தொற்று தொடர்பாக அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, நிவ்யோர்க், சான் ப்ரான்ஸிஸ்கோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் உவான் நகரத்துடன் நேரடியாகவோ அல்லது அதனுடன் தொடர்புடைய விமானங்களினுடாக வரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துவதற்கு அமெரிக்க சுகாதார துறையில் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

குறித்த வைரஸ் தொற்று ஆயிரத்து 700 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், அந்த வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.