சமூக வலைத்தளங்களில் வைரலாகும் “மாஸ்டர்” படத்தின் புதிய ஸ்டில்

Monday, 20 January 2020 - 8:46

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E2%80%9D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்

இந்த நிலையில் சற்று முன்னர் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிகம் டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் இந்த புகைப்படம் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மாளவிகா மோகனன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.