அச்சுவேலி பொருளாதார வலயத்தினை மீள தொழில்பட வைப்பதற்கான நடவடிக்கைகள்..

Sunday, 26 January 2020 - 13:59

%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
அச்சுவேலி பொருளாதார வலயத்தினை மீள தொழில்பட வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

11வது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வின் ஆரம்ப நாள் அன்று அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி பொருளாதார வலயத்தினை மீள செயல்படுத்துவதன் மூலம்இ வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும்.

தற்போது அந்த வலயத்தில் நான்கு நிறுவனங்கள் உள்ள போதிலும் அவற்றின் ஆற்றல் மேலும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.

தற்போது அச்சுவேலி வலயத்தில் 9 ஏக்கர் நிலம் முழு அளவில் பண்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதனால்இ முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் உடனடியாக தமது பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர 65 ஏக்கர் நிலம் அபிவிருத்தி செய்யப்படாத நிலையில் உள்ளது.

இலங்கை முதலீட்டு சபை தமது நிர்வாகத்தின் கீழ் இல்லாத காரணத்தால்இ இந்த நிலத்தை பண்படுத்துவது குறித்து உரிய திட்டம் ஒன்றின் ஊடாக பணிகளை மேற்கொள்வது குறித்து பிராந்திய முதலீட்டு சபையுடன் பேசவுள்ளதாக உள்தாக வட மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம் முற்ற வெளி மைதானத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வர்த்தக கண்காட்சி நிகழ்வு இன்றுடன் நிறைவடைகின்றது.