புதிய ஆர்ப்பாட்டங்கள்..

Sunday, 26 January 2020 - 19:18

+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
ஈராக்கிய தலைநகர் பாக்தாத் மற்றும் ஏனைய நகரங்களில் புதிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை குறி வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈராக்கிய பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களில், பாக்தாத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

தென் நகரான நசிரியாவில் 17 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளானவர்களில் நால்வர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.