இந்திய அணி அதிரடி வெற்றி...!!

Sunday, 26 January 2020 - 19:17

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...%21%21
சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் டிம் சீஃபர்ட்  ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும், மாட்டின் குப்டில்  33 ஓட்டங்களையும் அதிகூடுதலாக பெற்றுக் கொடுத்தனர்.

இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் கே.எல் ராஹூல் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றதுடன், ஸ்ரேயாஸ் ஐயர் 44 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதற்கமைய 5 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரில் இந்திய அணி 2 இற்கு பூஐ;ஐpயம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.