உலங்கு வானூர்தி விபத்தில் பிரபல வீரர் மரணம்

Monday, 27 January 2020 - 6:17

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்காவில் கலிபோர்னியாவின் கலாபசாஸ் (Calabasas) நகரில் இடம்பெற்ற உலங்கு வாநூர்தி விபத்தில் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பிரையன்ட் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர்.

தனியார் உலங்கு வானூர்தி ஒன்றில் அவர் மற்றும் அவரது மகள் உள்ளிட்டோர் பயணித்த போது, உலங்கு வானூர்தியில் திடீரென ஏற்பட்ட தீப்பரவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 41 வயதான கோபி பிரையனின் 13 வயதான மகளும் பலியாகினார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக கோபி பிரையன் 20 ஆண்டுகள் விளையாடியுள்ளதுடன் அந்த அணி அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன்ஷிப்பை ஐந்து முறை வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.