தொடரை கைப்பற்றுமா இலங்கை அணி..? இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று..!

Monday, 27 January 2020 - 7:25

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%3F+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..%21
சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

சிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் 4 நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் நேற்றைய 3 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அத்துடன் இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 400 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.