ரசிகரை கெட்ட வார்த்தையில் திட்டி சர்ச்சையில் சிக்கிய பிரபல வீரர்

Monday, 27 January 2020 - 10:01

%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸில் தென்னாப்பிரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்டின் முதல் நாள் ரசிகருடன் கோபமாக பேசியது கேமராவில் சிக்கியதை அடுத்து பென் ஸ்டோக்ஸ் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகித்துவரும் நிலையில், நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 24 ஆம் திகதி தொடங்கியது.

இந்நிலையில் குறித்த போட்டியில் களத்திற்கு வந்ததும் ஆட்டமிழந்து திரும்பிய பென் ஸ்டோக்ஸ், அவரை கிண்டலடித்த ரசிகர் ஒருவரை, பெவிலியனுக்கு செல்லும் வழியில் படியில் நின்று கொண்டு, முடிந்தால் மைதானத்துக்கு வெளியே வந்து சொல்லுடா என்றவாறு கெட்ட வார்த்தையிலும் பேசினார். ஸ்டோக்ஸ் ரசிகரை திட்டியது, கேமராவில் பதிவானதால், அதிவேகமாக வைரலானது.

இதையடுத்து தனது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ். இருப்பினும் இவரின் மேற்படி செயற்பாட்டுக்காக ஐ.சி.சி இவரது ஊதியத் தொகையிலிருந்து 15 வீதத்தை அபராதமாக விதித்துள்ளது.