பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள இலங்கை மற்றும் சிம்பாம்வே அணிகள்

Monday, 27 January 2020 - 13:02

%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி ஹராரேயில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இருந்து சிம்பாப்வே அணியின் வீரர் கைல் ஜார்விஸ் (முலடந துயசஎளை) விலகியுள்ளார்.

காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு பதிலாக சகலதுறை வீரர் டினோடெண்டா முடோம்போட்சி (Tinotenda Mutombodzi) அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சிம்பாப்வேயின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெவின் கசுசாவும்( முநஎin முயளரணய) காயமடைந்திருந்த போதும் நேற்று முழுநேர பயிற்சியிலும் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வேக பந்து வீச்சாளர் கால் மும்பாவும்(Carl Mumba) அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஐன்ஸ்சிலே இண்ட்லோவுக்கு (Ainsley Ndlovu) பதிலாக டிம்சன் மருமா (Timycen Maruma) இணைக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணியை பொறுத்த வரையில் கசுன் ராஜிதவிற்கு பதிலாக டில்ருவன் பெரேரா அல்லது லக்ஸன் சந்தகன் இணைக்கப்படுவர் என கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் கிரிக்கட் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.