கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்வு

Monday, 27 January 2020 - 13:23

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+80%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

அதிகளவானோர் வசிக்கும் ஹூபே மற்றும் ஹ_வாங் உள்ளிட்ட மாகாணங்களில் இந்த வைரஸ் தொற்று காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை ஒரே இரவில் 56 இல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளதாக அந்தநாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் வசிப்பவர்கள் ஹொங்கொங்கிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் சீனாவில் கொரோனா வைரஸ்ஸால் இதுவரை 2 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் 300 பேர் அளவில் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய புத்தாண்டு விடுமுறை மூன்று நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீனாவில் பல தொடரூந்து சேவைகளும் விமான சேவைளும் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு தூர பேருந்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஊஹான் மாகாணத்தில் 11 மில்லியன் மக்கள் நகரத்தில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு 5 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ பணியாளர்கள் நோய் பரவலை கட்டுப்படுத்தவும் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஊஹான் மாகாணத்தில் தற்காலிகமாக இரண்டு புதிய மருத்துவமனைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் அஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் குறைந்தது 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளது.

எனினும் சீனாவுக்கு வெளியே எவருக்கும் உயிரிழக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ்ஸால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயோதிபர்கள் மற்றும் சுவாச நோய் உள்ளவர்களே பெரும்பாலும் உயிரிழப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.