கீர்த்தி சுரேஷிற்கு கோரோனோ வைரஸா...? ரசிகர்கள் கேள்வி..!

Wednesday, 05 February 2020 - 8:58

%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE...%3F+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF..%21
விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வந்துவிட்டார்.

இந்நிலையில் அவர் தற்போது பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். பாலிவுட்டில் கால் பதித்தும் அக்கட தேசத்தில் உள்ள நடிகைகளை போன்றே கீர்த்தியும் தன்னை மெருகேற்றி வருகிறார்.

பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு ஸ்லிம் பியூட்டியாக வலம் வருவார்கள்.

அப்படிப்பட்ட நடிகைகளுக்கு தான் எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கும். எனவே அதனை கருத்தில் கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடலை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. பாதி உடம்பாக மாறி ஒட்டிய கன்னத்துடன் கீர்த்தியை பார்த்தவர்கள்.... உங்களுக்கு என்ன கோரோனா வைரஸ் வந்துடுச்சா என்று கிண்டலாக கேட்டு வருகின்றனர்.