நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்..!!

Wednesday, 05 February 2020 - 11:47

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21%21
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் யோகிபாபு.

இவரது திருமணம் விரைவில் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் அவை அனைத்தையும் யோகிபாபு மறுத்தார், மேலும் திருமணத் தகவலை நானே அறிவிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.