புதிய தலைமைத்துவம் தொடர்பில் ஆராய்வு

Thursday, 13 February 2020 - 7:57

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+
இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம், கட்சியின் உயர்மட்டம் மீண்டும் ஆராய உள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தற்போது செயற்பட்டு வரும் நிலையில், அவர் அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பரா? அல்லது புதிய தலைவரை நியமிக்க வேண்டுமா? என்பது தொடர்பில் குறித்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
 
ஏப்ரல் மாதம் நடுப்பகுதி அளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, காங்கிரஸின் தலைவர் பதவிலியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.
 
இதையடுத்து. கட்சியின் தலைமை பொறுப்பை சோனியா காந்தி மீண்டும் ஏற்றார்.
 
எவ்வாறிருப்பினும், சோனியா காந்தியின் உடல்நிலை மற்றும் புதுடில்லி சட்ட சபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி முதலான காரணங்களில் அடிப்படையில் தலைமைத்துவம் குறித்து காங்கிரஸ் கட்சி மீண்டும் அவதானம் செலுத்துகிறது.
 
எவ்வாறிருப்பினும், காங்கிரஸின் தலைமை பதவியை ராகுல் காந்தி மீண்டும் ஏற்பாரா என்பது தொடர்பில் இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.