மகிழ்ச்சிகர செய்தி..! கிடைத்தது அமைச்சரவை அனுமதி..!

Thursday, 13 February 2020 - 20:19

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF..%21
அதிகரிக்கும் அரிசி விலையை கட்டுப்படுத்துவற்காக விசேட வேலைத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஸ் பத்திரன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

25 ஆயிரம் மெற்றிக் டன் அரிசியை களஞ்சியப்படுத்தும் இடங்கள் மற்றும் அரிசி கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு அதன் கீழ் செயல்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் உணவு பாதுகாப்பை அதிகரிப்பதற்காக பிலிப்பீன்ஸ் நாட்டுடன் உள்ளக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.