கொரோனா தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி...

Friday, 14 February 2020 - 8:17

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...
கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
அந்த நாட்டு ஊடகங்களுக்கு அவர் நேற்றைய தினம் கருத்துரைத்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறு பொருளாதார பாதிப்பை சமாளிப்பதற்கு அரசாங்கம் உதவுமெனவும் சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை கொவிட் 19 தொற்று காரணமாக ஜப்பானில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.
 
ஜப்பானின் கனகாவா பிராந்தியத்தை சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இதேவேளை, கொவிட் 19 வைரஸ் சீனாவின் - ஹூபேய் நகரிலுள்ள மேலும் 15 ஆயிரம் பேருக்கு தொற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஹூபேய் பிராந்தியத்தில் குறித்த தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த பிராந்தியத்தில் மாத்திரம் இதுவரை 48 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அத்துடன் சீனாவில் கொவிட் 19 வைரசால் இதுவரை ஆயிரத்து 489 பேர் பலியாகியுள்ளதுடன் ஒரே நாளில் 254 பேர் உயிரிழந்தனர்.
 
அத்துடன் சீனாவில் கொவிட் 19 வைரஸ்ஸால் இதுவரை 64 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை ஐந்து துறைமுகங்களால் அனுமதி மறுக்கப்பட்ட எம்.எஸ் வெஸ்டர்டேம் பயணிகள் கப்பல் கம்போடியா - சிஹனோக்வில் துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
கொவிட் 19 வைரஸ் பரவக் கூடும் என்ற அச்சத்தில் தாய்லாந்து, தாய்வான், குவாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் குறித்த கப்பலை திருப்பி அனுப்பியுள்ளன.
 
கடந்த முதலாம் திகதி ஆயிரத்து 455 பயணிகளுடன் ஹொங்கொங்கில் இருந்து குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.
 
14 நாட்கள் சுற்றுலா செல்லும் நோக்கில் குறித்த கப்பல்  பயணத்தை ஆரம்பித்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.