விஷேட கலந்துரையாடல்..

Friday, 14 February 2020 - 8:18

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D..
ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே இன்றைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது கட்சியின் தற்போதைய இன்னல்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே முன்னதாக சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள முறைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

செயற்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் புதிய கூட்டணயின் சின்னதாக யானை சின்னம் வழங்கப்பட வேண்டுமென இதன்போது சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த யோசனை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்னவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

யானை சின்னம் வேண்டுமெனின் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் கீழே போட்டியிட வேண்டுமென செயற்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கு சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் இணக்கம் தெரிவித்திருக்கவில்லை.

இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட் கிழமை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.